செவ்வாய், 30 செப்டம்பர், 2008

இன்று

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்.
இன்று பல கம்பெனிகளில் விடுமுறை கிடையாது. எனக்கு லீவு தான்.

எனது ப்ளாகை படித்துவிட்டு என்னை ஊக்கப் படித்தியவர்களுக்கு நன்றி.
இன்னும் பல் விளக்கவில்லை. :(

இனி கொலை வெறியுடன் மொக்கை போட முடிவு செய்து விட்டேன்.
1.10.2008 ஆனந்த விகடன் படித்தேன் . பரவா இல்லை, இந்த வாரம் சில நல்ல தகவல்கள் இருந்தன.
புக்கை காசு கொடுத்து வாங்கியவனுக்கு நன்றி.
முதலில், வாலி அவர்கள் எழுதிய சிறு கதை.
அடுத்தது தென் ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்காகப் போராடும் ஜாகி அஸ்மத் பற்றியது.
மூன்றாவது, பந்தயம் பட விமர்சனம். இவ்வளவு கேவலமாக எந்த படத்திற்கும் விமர்சனம் வரவில்லை. ரித்தீஷ் நடித்த நாயகன் படம் கூட முப்பத்தி ஒன்பது மார்க் வாங்கி விட்டது. பந்தயம் சகிக்கவில்லை.
மற்றவை எல்லாம் வழக்கம் போல மொக்கை தான்.

நாமக்கல் சிபி அவர்கள் வோர்ட் வேரிபிகாசின் எதற்கு என்று கேட்டுள்ளார். அது என்ன வென்று எனக்குப் புரிய வில்லை. எனவே அந்த பதிவை நான் நீக்கி விட்டேன்.
இந்த வாரமாவது டில்லியில் குண்டு வெடிக்காமல் இருக்கட்டும்..

கருத்துகள் இல்லை: