வெள்ளி, 26 செப்டம்பர், 2008

நூறு ரூபாய்

"பணம் வருமா வராதா?"
"இப்ப முடிவா என்ன சொல்றீங்க? "
"மேனேஜர் எங்கே? "
"அவனை வரசொல்லு".

ரெண்டு மணி நேரமாக இந்த சண்டை நடந்து கொண்டிருதந்து.
இடம்- நெல்லை புற வழிச்சாலை.
பேருந்து பெங்களூர் செல்ல வேண்டும்.
சண்டை போட்டவர்கள் எல்லாரும் வோல்வோ பேருந்திற்கு முன் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வந்த வண்டி சாதாவண்டி.
எனவே பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று சண்டை.
நான் பேருந்தினுள் சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.
கடைசி இருக்கை.
எப்படியும் அவர்கள் பணம் கொடுக்க போவதில்லை என்று எனக்கு அசாத்திய நம்பிக்கை.
டிவியில் படம் ஓடி கொண்டிருந்தது. நான் அதை பார்க்க ஆரம்பித்தேன்.
படமும் முடிந்து விட்டது.
ஒரு வழியாகஅனைவரும் பேருந்தில் ஏறினார்கள். எனது அடுத்த சீட்டில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் தான் முன்னால் நின்று சண்டை போட்டவர்.
நான் சண்டையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
சிறிது நேரத்தில் ஒருவர் பேருந்தில் உள்ள அனைவருக்கும் நூறு ரூபாயைத் திருப்பி வழங்க ஆரம்பித்தார்.
கடைசியாக இவருக்கும் நூறு ரூபாய் வந்தது.
இவர் என்னிடம் இருந்த டிக்கெட்டை வாங்கிப்பார்த்து அவனிடம் எனக்கும் நூறு ரூபாய் வங்கித் தந்தார்.
அதில் இருந்த காந்தி தாத்தா சிரித்துக்கொண்டிருந்தார்.

5 கருத்துகள்:

வெண்பூ சொன்னது…

புதுவரவாக தெரிகிறீர்கள். இந்த இரண்டு இடுகைகளிலேயே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பெயருக்கு ஏற்றாற் போல் நிறைய மொக்கை போட வாழ்த்துக்கள். :)))

நல்வரவு..

தமிழன்-கறுப்பி... சொன்னது…

எழுதுங்க, கலக்கலாம்...:)

நாமக்கல் சிபி சொன்னது…

//புதுவரவாக தெரிகிறீர்கள். இந்த இரண்டு இடுகைகளிலேயே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பெயருக்கு ஏற்றாற் போல் நிறைய மொக்கை போட வாழ்த்துக்கள். :)))

நல்வரவு..//

ரிப்பீட்டே! வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி சொன்னது…

மொக்கைன்னு பேரு வெச்சிட்டு

வோர்ட் வெரிஃபிகேஷன்லாம் வைக்கலாமா?
டிசேபிள் பண்னுங்க சாமி!

ரவி சொன்னது…

வேர்டு வெரிப்பிக்கேஷனை நீக்கவும்....!!!!

கொஞ்சம் கேப் விட்டு எழுதவும்...