வெள்ளி, 26 செப்டம்பர், 2008

நேரம்

ஏடிம் முன்னால் நீண்ட கியூ நின்று கொண்டிருந்தது. நான் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வங்கியில் இருப்பது வெறும் அறுநூறு தான். நூறு ரூபாய்க்காக ஒரு மணி நேரம் நிற்க வேண்டுமா? என்ன செய்வது? பிளான் பண்ணாம எதையும் செய்யக்கூடாது. ஒரு வழியாக என் முறை வந்தது. அப்போது ஒருவன் வரிசையில் வராமல், அவசரம் ஊருக்குப் போக வேண்டும். நான் முதலில் எடுக்க வேண்டும் என்றான். பின்னால் நின்றவர்கள் அவனைத் திட்ட ஆரம்பித்தார்கள். எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனை முதலில் அனுமதித்தேன். வெளியே வரும்போது அவன் கையில் ஏகப்பட்ட நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. நான் உள்ளே சென்று என் கார்டைத் தேய்த்தேன். திரையில் "ஒன்லி பைவ் ஹண்ட்ரட் ருப்பீஸ் "என்று எழுத்துக்கள் மின்னின.

1 கருத்து:

நாமக்கல் சிபி சொன்னது…

நல்லா இருக்குங்க கதை!

முடிவை ஓரளவு ஊகிக்க முடிந்தது என்றாலும் நல்ல முயற்சி!

வாழ்த்துக்கள்!